Tuesday, March 4, 2025

அடையாளம்

அடையாளம் துறப்பது

அவ்வளவு எளிதானதா?

நான் 

எனது எல்லா அடையாளங்களையும்

அடையாளம் தெரியாமல்

அழிக்க விரும்புகிறேன்

ஒரு அமாவாசை இரவில்

அரவம் தன் தோலுரிப்பது போல்|

விடிந்ததும் உரித்ததோலை

பார்த்து இது என்ன ஜாதி அரவத்தோல் ?
 என்று கேட்கும்

இந்த அடையாளம் தேடும் சமூகம்

No comments:

Post a Comment